சென்னை: ரூ.16கோடியில் கட்டப்பட்ட புதிய பாலம் 3 மாதத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது ஏன்? என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் இணைக்கும் உயர்மட்ட பாலம் திறக்கப்பட்டு 3 மாதங்களே ஆன நிலையில், கடந்த வாரம் வடமாநிலங் களில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய பெங்கல் புயல் வெள்ளத்தால், அடித்துச் செல்லப்பட்டது. தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், திறப்பு விழா கண்ட 3 மாதத்தில் ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட […]