கடற்படைக்கு த்ரிஷ்டி-10 ட்ரோன் விநியோகித்தது அதானி நிறுவனம்

ஹதராபாத்: இந்திய கடற்படைக்கு இரண்டாவது திருஷ்டி-10 ஸ்டார்லைனர் ட்ரோனை அதானி டிபென்ஸ் நிறுவனம் விநியோகித்துள்ளது.

ராணுவத் தளவாட தயாரிப்பில் அதானி டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள மையத்தில் திருஷ்டி-10 ஸ்டார்லைனர் என்ற ஆளில்லா விமான (ட்ரோன்) தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இதன் முதல் ட்ரோன் இந்திய கடற்படைக்கு கடந்த ஜனவரி மாதமும், 2-வது டிரோன் தரைப்படைக்கு கடந்த ஜூன் மாதமும் விநியோகித்தது.

இந்நிலையில் 3-வதாக தயாரித்த ட்ரோனை, கடற்படைக்கு இரண்டாவது முறையாக வழங்கியுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ட்ரோன் 32 ஆயிரம் அடிக்கு மேல் தொடர்ந்து 48 மணி நேரம் வரை பறக்கும் திறனுடையது. இதில் 450 கிலோ எடையுள்ள பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். சவாலான இடங்கள், வானிலை ஆகியவற்றிலும், இந்த ட்ரோனை இயக்க முடியும். திருஷ்டி-10 டிரோன், இஸ்ரேலின் ஹெர்மெஸ் 900 ட்ரோனுக்கு நிகரானது. இது வானில் பறப்பதற்கான தரச் சான்றிதழை நேட்டோவின் ஸ்டாநாக் 4671 என்ற அமைப்பு வழங்கியுள்ளது.

இந்த ட்ரோன் குஜராத்தின் போர்பந்தர் பகுதியில் கடற்படையின் கண்காணிப்பு மற்றும் உளவு பணிக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் கடற்கொள்ளை சம்பவங்களும் குறைய வாய்ப்புள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.