IM Japan தொழில்நுட்ப சேவை பயிற்சி திட்டத்தின் (TITP) கீழ் 47வது பயிற்றப்பட்டவர்கள் குழு கடந்த (02) திங்கட்கிழமை ஜப்பானுக்கு புறப்பட்டது.
இக்குழுவில் தாதியர் சேவையில் 5 பயிற்சி பெற்றவர்களும், உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகளில் தலா ஒவ்வொரு பெண் பயிற்றப்பட்டவர்களும் உள்ளடங்குவர்.
தாதிச் சேவை, நிருமாணம், உற்பத்தி, பராமரிப்பு, மோட்டார் தொழில்நுட்ப பராமரிப்பு பிரிவு போன்ற துறைகளுக்காக 504 தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர்கள் தற்போது வரை ஜப்பானுக்கு சென்றுள்ளார்கள்.
இவ்வேழு பேர்கள் கொண்ட குழுவே 2024ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு சென்ற இறுதிப் பயிற்சி பெற்றவர்கள் குழு என்பது குறிப்பிடத்தக்கது.