சென்னை: ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடமாவட்ட மக்களுக்கு ரூ.2000 வெள்ள நிவாரணத்துக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அவர்களின் குடும்ப அட்டைகளின் படி, டோக்கன் விநியோகிக்கப்பட்டு 3 அல்லது 4 நாட்களுக்குள் நிவாரண தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையின் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் […]