அடிலெய்டு,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி (பிங்க் பால் டெஸ்ட்) நாளை தொடங்குகிறது.பகல்-இரவு ஆட்டமாக இந்த ஆட்டம் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் வென்று வெற்றி பயணத்தை தொடர் இந்திய அணி தீவிரம் காட்டும் . முதல் டெஸ்டில் விளையாடாத கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார். இது இந்திய அணிக்கு கூடுதல் பலம் ஆகும்.
அதே நேரத்தில் பகல்-இரவு டெஸ்டில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த அணி முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் உள்ளது.
நாளை டெஸ்ட் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.