Baakiyalakshmi : மீண்டும் அதே குழப்பத்திற்கு தள்ளப்பட்ட கோபி! – திரும்பவும் முதல்ல இருந்தா?

நாயகன் கோபியின் அப்பா கதாபாத்திரத்துக்கு எண்ட் கார்ட் போடப்பட்டதில் இருந்து பாக்கியலட்சுமி சீரியலின் கதை கொஞ்சம் மெதுவானது. அதன் பின்னர் கோபி பாக்யாவை பழி வாங்குவது, பாக்யா பதிலடிக் கொடுப்பது என கொஞ்சம் விறுவிறுப்பானது. இனி கோபி தான் வில்லன், அவரை பாக்யா எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற போக்கில் கதை நகரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கடந்த வார எபிசோடுகளில் கதை தலைக்கீழாக மாறியது.

கோபியின் செல்ல மகள் இனியா தன் அப்பாவை நிலைகுலைய வைக்கும் அளவுக்கு மனதில் இருந்த ஆதங்கத்தை கொட்டித் தீர்க்க, கோபி மனம் மாறிவிட்டார்.

Baakiyalakshmi

இனியா பேசியது ஆழமாக மனதை பாதிக்க கோபி ஆறுதல் தேடி ராதிகாவிடம் செல்கிறார். ஆனால் ராதிகா அவரின் அம்மாவின் பேச்சை கேட்டு கோபியிடம் சண்டைப் போடுகிறார். யாருக்காக மகன்கள், மகள் என அனைவரையும் விட்டுவிட்டு வந்தோமோ அவர் தனக்கு ஆறுதலாக இல்லை என்று கோபி மீண்டும் சோகமாகி வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

கார் ஓட்டி செல்லும் போது அவருக்கு நெஞ்சுவலி வருகிறது. ராதிகாவுக்கு கால் செய்கிறார், கோவத்தில் இருக்கும் அவர் போனை ஆஃப் செய்கிறார். இறுதியில் பாக்யாவுக்கு போன் செய்கிறார். பாக்யாவும் எழிலும் வந்து கோபியை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். 

அதன் பின்னர் கோபியின் அம்மா, இனியா, செழியன் ஆகியோர் ராதிகாவை மருத்துவமனையை விட்டு வெளியேற சொல்கின்றனர். பாக்யா ராதிகாவுக்கு ஆதரவாக நிற்கிறார். ராதிகாவை இந்த வாழ்க்கையை இழந்துவிடுவோம் என்ற ஆற்றாமையில் தவிக்கிறார். பாக்யாவிடம் தன் மனதில் இருந்த வருத்தங்களை பகிர்கிறார். 

பாக்யலட்சுமி சீரியல் ராதிகாவின் கதாபாத்திரம் பாக்யாவுக்கு நல்லத் தோழியாக அறிமுகப்படுத்தப்பட்டது. ராதிகா பாக்யாவை டீச்சர் என்று அழைப்பதும், பாக்யா ராதிகாவுக்காக சமைத்து கொடுப்பது என அவர்களின் நட்பு ரசிக்க வைத்தது.  சந்தர்ப்பச்சூழலால எதிரெதிர் திசையில் பயணிக்கும் தோழிகள் மீண்டும் ரீயூனியன் ஆனால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது நேற்றைய மருத்துவமனை காட்சி. 

Baakiyalakshmi

ராதிகா பாக்யாவை டீச்சர் என்று அழைத்து அவரின் தோளில் சாய்ந்த காட்சி நெகிழ வைக்கிறது. ராதிகாவின் புலம்பல்களை பாக்யா பொறுமையாக கேட்டு ஆறுதல் சொல்கிறார். எல்லாம் சரியாகிரும் என்று தேற்றுகிறார். பொதுவாக வாழ்க்கையில் துயரங்களை சந்தித்து மீண்டு வந்த பெண்கள் பலமடங்கு மனவலிமையை பெற்றிருப்பர். பாக்யலட்சுமி சீரியலில் பாக்யாவின் எழுச்சி அப்படியானது தான்.

20 வருடம் தன்னுடன் ஒன்றாக வாழ்ந்த எக்ஸ் கணவரின் மனைவிக்கு, “ரெண்டு பேரும் மனசுவிட்டு பேசுங்க ராதிகா, சரியாகிரும்” என்று ரிலேஷன்ஷிப் அட்வைஸ் கொடுக்கும் அளவுக்கு உறுதியாகிவிட்டார் பாக்யா. 

இனி சமீபத்திய ப்ரோமோவுக்கு வருவோம். இன்று வெளியான ப்ரோமோவில், கோபி மருத்துவமனையில் இருந்து டிஸ்கார்ஜ் ஆகிறார். ஆனால் யார் வீட்டுக்கு செல்வது என்ற குழப்பம் எழுகிறது. இனியா, கோபியின் அம்மா , செழியன் என அனைவரும் கோபியை பாக்யாவின் வீட்டிற்கு வர சொல்கின்றனர். ராதிகா ஒருபுறம், அம்மா ஒருபுறம் என கோபி குழப்பத்தில் ஆழ்கிறார்.

Baakiyalakshmi

பாக்யா ராதிகாவுக்கு ஆதரவாக நிற்கிறார், கோபி ராதிகா வீட்டிற்கு தான் போகணும் என்கிறார். ராதிகாவா, பாக்யாவா என்று மீண்டும் அதே சூழலுக்கே தள்ளப்படுகிறார் கோபி. போனமுறை பாக்யாவை வெறுக்க கோபிக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தன. ஆனால் தற்போது பாக்யா ராதிகாவை விட உறுதியான `self made’ பெண்ணாக உருமாறி இருக்கிறார். 

கோபி என்ன முடிவு எடுக்கப் போகிறார்? இந்த காட்சி தான் இனி சீரியல் எந்த திசையில் செல்லும் என்பதை தீர்மானிக்கும்!  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.