விவசாயிகளுக்கு மிகவும் சிறந்த சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கான உத்தரவாதத்தை விவசாயிகளுக்கு வழங்குவதாக கமத்தொழில் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ண தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக காணப்பட்ட அசாதாரண காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பாக நேற்று (04)பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
தற்போது 8 இலட்சம் ஹெக்டயர் நிலத்தில் நெல் செய்கை பண்ணப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்திற்கும் விவசாயிகளுக்கு எதிர்வரும் சில தினங்களில் பசளைக்காக நிதி வழங்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் விவசாயத்துறையில் எமது நாடு உயரும் என்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ண மேலும் விவரித்தார்.