சென்னை பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது தெரியாமல் அதைக் குடித்த அப்பகுதி மக்களுக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 30 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த திருவீதி, வரலட்சுமி ஆகிய இரண்டு பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. திருவீதி என்பவர் நேற்றிரவே உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழப்பு அதிகரித்ததை அடுத்து பல்லாவரம் பகுதியில் […]