* விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்காகக் கொண்டு சகல விவசாய வேலைத் திட்டங்களுக்கான யோசனைகளும் தயாரிக்கப்படும்.
* அரசியல் கலாச்சாரத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் அரசாங்க சேவையிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
* தோல்வியுற்றவர்களை பழிவாங்குவதற்கு வரலாறு முழுவதும் காணப்பட்ட அரசியல் கலாச்சாரம் தற்போதைய அரசாங்கத்தினால் மாற்றப்பட்டது
விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் கே. டி. லால் காந்த நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இடைக்கால கணக்கறிக்கையுடன் சம்பந்தப்பட்ட யோசனைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விவசாய அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
நீர்ப்பாசன அலுவல்கள் மற்றும் விவசாயிகளுக்கு காணி மற்றும் உரம் வழங்குவதற்காக கடந்த காலங்களில் பாரிய நிதி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் எப்பொழுதும் ஏழைகளாகவே இருந்தார்கள் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த விவசாயிகள் உள்ள இடத்தில் இருந்து எதிர்காலத்தில் அவர்களின் தரத்தை உயர்த்துவதை நோக்காகக் கொண்டு, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி வைப்பதற்காக எதிர்காலத்திற்காக விவசாயத் துறையில் சகல முன்மொழிவுகளும் தயாரிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டில் விவசாயத்திற்காக வன விலங்குகளினால் ஏற்படுத்தப்படும் பாதிப்புகள் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார் .
தமது விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விலங்குகள் விவசாய நிலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் போது அவை தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்கு தடை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இப்பிரச்சினைக்கு தீர்வு தேடும் பொறுப்பை தமது அமைச்சு பொறுப்பேற்பதாகவும் அவர் மேலும் விவரித்தார்.
அவ்வாறே தமது மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு விரைவாக விடை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்;
கடந்த காலங்களில் விவசாயத் துறையில் தனியார் துறையுடன் சம்பந்தப்பட்டுள்ளவர்கள், பல்வேறு வேலைத்திட்ட யோசனைகளைக் கொண்டு வந்தார்கள். அந்த ஒவ்வொரு நிகழ்ச்சித் திட்ட யோசனையிலும் விவசாயின் பகுதி கைவிடப்பட்டுள்ளது.
இந்த விவசாயிகள் குழுவை கருத்திற் கொள்ளாமலே நிகழ்ச்சித் திட்ட முன்மொழிவுகள் முழுமையாக தயாரிக்கப்பட்டுள்ளன.
நாம் தேர்தல் காலத்தில் பொதுவாக கதைத்த நான்கு காரணங்கள் காணப்படுகின்றன. ஒன்று தேசிய அரசியல் கலாச்சாரத்தை தோற்கடிப்பது/ பொருளாதார/ சமூக மற்றும் கலாச்சார பின்னடைவு என்பன. பொருளாதார, சமூக மற்றும் கலாச்சாரத்தை கட்டியெழுப்புவதற்கு வேண்டுமாயின் முதல் காரணமான அரசியல் கலாச்சாரத்தை சரியாகக் கட்டியெழுப்ப வேண்டும்.
அப்படி என்றால் நாம் அரசியல் கலாச்சாரத்தை நாம் மாற்றினோம். ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்த தினத்திலிருந்து அந்த மாற்றத்தை செய்வதற்கு எமக்கு முடிந்தது. நாம் சிஸ்டம் சேஞ்ச் ஒன்றை செய்தோம்
இந்த நாட்டின் விழாக்கள் தொடர்பாக ஒரு பாட்டு இருந்தது. மக்களின் சொத்துக்கள் வீணாக்கப்பட்டன. நாம் அந்தத் துறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தினோம்.
ஜனாதிபதியை அதிகாரத்திற்கு கொண்டுவந்தமை தொடர்பாக இன்று இந்த நாட்டு மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்கள் இந்த அரசாங்கத்தில் நிறுத்தப்பட்டன.
ஆனால் அரச சேவையில் இன்னும் வினைத் திறனற்ற தன்மை காணப்படுகிறது. அரசியல் கலாச்சாரத்தினால் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தை அரச சேவையிலும் ஏற்படுத்த வேண்டும் இல்லாவிடில் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது.
அரசாங்க ஊழியர்கள் தபால் மூல வாக்குகளில் தெரியப்படுத்தியது அவர்கள் இந்த சிஸ்டம் சேஞ்சுக்கு விருப்பம் என்பது தான். எனவே, அரசாங்க சேவையிலும் வினைத்திறனான பயணம் ஒன்றை எதிர்காலத்தில் மேற்கொள்ள முடியும் என நாம் நம்புகிறோம் என்றும் விவசாயத்துறை அமைச்சர் கே. டி. லால் காந்த மேலும் வலியுறுத்தினார்.