சிகரெட் பேக்கை போல இனி ஸ்மார்ட்போனிலும் வார்னிங்!! ஆலோசிக்கும் அரசு

Smartphone Addiction: இன்றைய காலகட்டத்தில் உணவு, உடை, இருப்பிடம் போல மொபைல் போனும் மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உருவெடுத்து விட்டது. இப்போதெல்லாம் மக்கள் தொலைபேசிகளை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இதில் சில தேவையான பணிகளாக இருந்தாலும், பல நேரங்களில் நாம் தேவையில்லாமல் இதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். 

இதன் காரணமாக தூக்கம், மன ஆரோக்கியம் மற்றும் உறவுகளுக்கு இடையிலான பிணைப்பும் கெட்டுப்போகின்றன. மொபைல் போன்கள் நமக்கு பல வழிகளில் உதவுகின்றன என்றாலும், இவற்றால் வாழ்வில் நாம் பல பிரச்சனைகளையும் சந்திகிறோம், முக்கியமான விஷயங்களையும் இழக்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

Spain: ஸ்பெயின் அரசு அதிரடி முடிவு

மொபைல் போனால் மக்களுக்கு வரும் ஆபத்துகள் பற்றிய பிரச்சனையை ஸ்பெயின் அரசு தீவிரமாக எடுத்து இதற்காக புதிய விதியை வகுத்துள்ளது. இப்போது ஸ்பெயினில் விற்கப்படும் அனைத்து ஃபோன்களிலும் சிகரெட் பாக்கெட்டில் இருப்பது போன்ற எச்சரிக்கை (Warnings) இருக்கும். இந்த எச்சரிக்கையின் மூலம் மக்கள் ஃபோனை அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்வார்கள்.

ஸ்பெயின் அரசாங்கம் இதற்கான ஒரு குழுவை அமைத்துள்ளது. அது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த குழு, டிஜிட்டல் சேவைகளில் கட்டாய சுகாதார எச்சரிக்கைகளை பரிந்துரைப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிகப்படியான பயன்பாடு மற்றும் தீங்கு விளைவிக்கும் சூழலின் அபாயங்கள் குறித்து இது பயனர்களை எச்சரிக்கும். இந்த எச்சரிக்கைகள் சிகரெட் பொதிகளில் உள்ளதைப் போலவே செயல்படும் என்றும், இருப்பினும் அவற்றின் கடுமை குறைவாக இருக்கும் என்றும் பல கருத்துகள் முன்மொழியப்பட்டுள்ளன.

போனில் இருக்கும் எச்சரிக்கை செய்திகள், ஸ்மார்ட்போனுக்கு அடிமையாவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் பற்றிய தெளிவான நினைவூட்டலை வழங்கும். சில செயலிகள் அல்லது இயங்குதளங்களை அணுகும்போது எச்சரிக்கை செய்திகளைக் காட்டவும் அறிக்கை பரிந்துரைக்கிறது. மொபைல் போன்களை அதிக விழிப்புணர்வுடன் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.

எச்சரிக்கை செய்தியில் என்ன இருக்கும்?

– மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் போன் பயன்படுத்தவே கூடாது என்று அறிக்கை கூறுகிறது. 
– மூன்று முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள் தொலைபேசிகளை மிகக் குறைவாகவே பயன்படுத்த வேண்டும். 
– 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தொலைபேசிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக்கூடாது.
– சிறு குழந்தைகள் போன் அல்லது டேப்லெட்களை அதிகம் பயன்படுத்தக் கூடாது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
– குழந்தைகளுக்கு உடனடி முடிவுகளைக் காட்டும் செயலிகள், அவர்களின் கற்றலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். 
– பள்ளிகள் குழந்தைகளுக்கு செயலிகள் மூலம் மட்டுமல்லாமல் பழைய பாணியில் பாடங்களை கற்பிக்க வேண்டும்

மொபைல் போன்களை அதிகமாக பயன்படுத்துவதால் மக்களின் மனநலம் சீர்குலைந்து வருவதாக அறிக்கை கூறுகிறது. ஆகையால், வழக்கமான பரிசோதனைகளின் போது மக்கள் எவ்வளவு போன் பயன்படுத்துகிறார்கள் என்று மருத்துவர்கள் கேட்க வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கின்றது. யாருக்காவது போன் அதிகமாகப் பயன்படுத்தும் பழக்கம் இருந்தால், மருத்துவர் அவர்களுக்கு ஆலோசனை வழங்கலாம்.

Australia: ஆஸ்திரேலியாவின் புதிய விதிகளுக்குப் பிறகு ஸ்பெயின் நடவடிக்கை

புதிய விதியை உருவாக்குவது குறித்து ஸ்பெயின் அரசு பேசியுள்ளது. இது தவிர குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை ஆஸ்திரேலியா தடை செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியாது. ஸ்பெயினிலும் இதே போன்ற விதிகளை உருவாக்கலாம் என அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.