இயக்குநர் சிகரம் எனப் போற்றப்பட்ட பாலசந்தரிடம், ‘நல்ல படம் என்னன்னு நான் எடுத்துக் காண்பிக்கிறேன்’ எனச் சவால்விட்டு தொடர்ச்சியாக கமர்ஷியல் சமரசங்களின்றி யதார்த்த திரைப்படங்களையே எடுத்துத் தனி அடையாளம் பெற்றவர் ஜெயபாரதி. இவர் இயக்கிய முதல் படமான ‘குடிசை’ 1979-ல் வெளியாகியிருந்தது. அன்றைய காலத்திலேயே கிரவுட் ஃபண்டிங் மூலம் நிதி திரட்டி எடுக்கப்பட்ட படம் அது. ‘உச்சி வெயில்’, ‘நண்பா… நண்பா…’, ‘புத்திரன்’ என இவர் அடுத்தடுத்து இயக்கிய படங்களுமே விமர்சகர்களிடமும் விருது விழாக்களிலும் பெரும் பாராட்டுகளைப் பெற்றன.
2010ஆம் ஆண்டு புத்திரன் என்ற படம்தான் ஜெயபாரதி இயக்கிய கடைசிப் படம். இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம் ஆகிய மூன்று தமிழக அரசின் விருதுகள் வழங்கப்பட்டன. கமர்ஷியல் சுழலுக்குள் சிக்காமல் மாற்று சினிமா பாதையிலேயே இயங்கி வந்த ஜெயபாரதி தேசீய விருதும் பெற்றிருக்கிறார். இவருக்கு நுரையீரல் தொற்றால் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில், சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, இன்று (டிசம்பர் 6) காலை 6 மணிக்கு ஜெயபாரதி காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…