சென்னை: திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த ஆண்டு மலையில் மகா தீபம் ஏற்றப்படுமா? என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு இன்று மாலை ஆட்சியர் மற்றும் அதிகாரிகளடன் ஆலோசனை நடத்துகிறார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக, கடந்த 1ந்தேதி பெய்த கனமழை காரணமாக மலையில் மண்சரிவு ஏற்பட்டு பாறை உருண்டு ஒரு குடும்பரே உயிரிழந்தது. மேலும் இரு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. […]