பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 61வது நாளுக்கான புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் டெவில்ஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் டாஸ்க் நடந்தது. ஏஞ்சல்ஸ் அணியிலிருக்கும் போட்டியாளர்களை வெறுப்பேற்றி அவர்கள் கோபத்திற்கு ஆளானாலோ, இல்லை அழுதாலோ அவர்களிடம் இருக்கும் ஹார்ட் சிம்பலை கழற்றி கொடுத்து விட வேண்டும் என்பது ரூல்ஸ் ஆக இருந்தது. பிறகு அவர்கள் டெவில்ஸ் அணியுடன் சேர்ந்து விடுவார்கள். அதுபோல அதிகமான ஹார்ட் பெறுபவர்கள் இந்த வாரம் நாமினேஷன் ஃப்ரீ டாஸ்க்கை பெறுவார்கள் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், டெவில்ஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் அணிகளுக்கிடையே கடுமையான போட்டியும், சண்டையும் நடந்தன. இந்த டாஸ்க்கில் சவுந்தர்யாவும், ஜாக்குலினும் மற்ற போட்டியாளர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்றைய புரோமோவில் இந்த வார டாஸ்கில் சுவாரஸ்யம் இல்லாத நபர்கள் யார் என பிக் பாஸ் கேள்வி கேட்கிறார். உடனே போட்டியாளர்கள் அனைவரும் ஜாக்லின் மற்றும் சவுந்தர்யாவைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதனைத்தொடர்ந்து அவர்களுக்குத் தண்டனையாக உப்பில்லாத சாப்பாடு கொடுத்துச் சாப்பிட வைத்திருக்கிறார் பிக் பாஸ்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…