புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் தினமும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அதானி விவகாரம் உள்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுகின்றன.
இந்த நிலையில், மாநிலங்களவையில், காங்கிரஸ் எம்.பி அபிஷேக் மனு சிங்வி இருக்கைக்கு கீழே பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பரபரப்பு புகாரை முன்வைத்துள்ளார்.
நேற்று அவை நடவடிக்கைகள் முடிந்த பிறகு நடைபெற்ற சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், எனது இருக்கைக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் என்னுடையது அல்ல என்று அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.