இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை தடம் சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னை சிறுசேரியை அடுத்த தையூரில் உள்ள ஐஐடி சென்னையின் டிஸ்கவரி வளாகத்தில் இது திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹைப்பர்லூப் சோதனை தடம் நாட்டின் எதிர்கால போக்குவரத்து தீர்வுக்கான ஒரு மைல்கல்லாக குறிப்பிடப்படுகிறது. இந்திய ரயில்வே, ஆர்சிலர் மிட்டல், ஐஐடி-மெட்ராஸின் மாணவர்கள் தலைமையிலான அவிஷ்கர் ஹைப்பர்லூப் குழு மற்றும் மாணவர் அடிப்படையிலான தொடக்க நிறுவனமான TuTr ஆகியவை இணைந்து உருவாக்கிய 410 மீட்டர் பாதை, ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை சோதனை செய்வதற்கும் […]