சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்ற பக்தர்களைப் புறக்கணித்து, மலையாள நடிகர் திலீப்புக்கு விஐபி தரிசனம் அளித்ததற்காக காவல் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு (TDB) மீது கேரள உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. டிசம்பர் 5ம் தேதி திலீப்புக்கு விஐபி தரிசனம் கொடுத்ததற்கான காரணம் என்ன என்றும், இது தொடர்பாக அன்றைய சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன் மற்றும் என். முரளி எஸ். கிருஷ்ணா […]