லக்னோ,
உத்தரபிரதேசத்தின் பிலிபித் மற்றும் சித்ரகூட் மாவட்டங்களில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்துகளில் 10 உயிரிழந்தனர் மற்றும் 12 பேர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காதிமாவில் இருந்து 11 பேர் காரில் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக உத்தரபிரதேசம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் பிலிபிட்டில், நியோரியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல, சித்ரகூட் மாவட்டத்தில் உள்ள ராய்புரா காவல் நிலைய பகுதியில் அதிகாலை 5.30 மணியளவில் லாரி-கார் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.