காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 222-ல் கத்தையாக கரன்சி நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியிருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி., “நாடாளுமன்றம் செல்லும் போது ஒரே ஒரு 500 ரூபாய் மட்டுமே எடுத்துச் செல்வேன். ராஜ்யசபாவில் கத்தைக்கத்தயாக பணம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறுவதை நான் முதல்முறையாக கேட்கிறேன், இது வினோதமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும், நேற்று அவைக்கு 12:57 மணிக்கு […]