சேலம்: டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியாக திகழும் மேட்டூர் அணை இந்த ஆண்டு இரண்டாவது முறையாக விரைவில் நிரப்ப உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 115 அடியை எட்டி உள்ள நிலையில், அணையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வடகிழக்கு பருவமழை மற்றும் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வந்துகொண்டிருக் கிறது. இதனால், கடந்த ஒரு வாரமாக அதிக அளவில் நீர் வந்துகொண்டிருப்பதால், அணையின் நீர் […]