சென்னை: அதானி முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு குறித்து விமர்சனம் செய்தால், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டியுள்ள நிலையில், அமைச்சரின் வெற்று மிரட்டலுக்கு பாமக அஞ்சாது என பாமக வழக்கறிஞர் பாலு பதிலடி கொடுத்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின், குஜராத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரான, சர்ச்சைக்குரியன அதானியை தனது சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் அளிக்க பாமக தலைவர் ராமதாஸ் வேண்டிய நிலையில், அதற்கு முதல்வர் தரப்பில் எந்தவொரு விளக்கமும் […]