ஓ.டி.டி தளத்தில் வெளியான பிறகும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது `அமரன்’.
தீபாவளி ரிலீஸாக சிவகார்த்திகேயன் நடிப்பில் இத்திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. இந்தப் படத்தின் ஒரு காட்சியில் சாய் பல்லவி தன்னுடைய மொபைல் எண்ணை ஒரு தாளில் எழுதி அதை சிவகார்த்திகேயனிடம் கொடுப்பார். “அந்த தாளில் இருப்பது என்னுடைய மொபைல் எண்.
பலரும் சாய் பல்லவிக்கு கால் செய்வதாக நினைத்து என்னை தொடர்புக் கொண்டு தொந்தரவு செய்கிறார்கள். இதனால் எந்த செயலிலும் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. படக்குழுவை தொடர்புக் கொள்ள முயற்சி செய்தும் எனக்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 1.1 கோடி நஷ்ட ஈடு வேண்டும்” என வழக்குப் போட்டிருந்தார் சென்னையை சேர்ந்த வாகீசன்.
வாகீசனின் இந்த வழக்கிற்குப் பிறகு `ஹே மின்னலே’ பாடலில் வரும் அந்த காட்சியை ப்ளர் செய்திருந்தார்கள். தற்போது ஓ.டி.டி-யில் வெளியான பிறகு அந்தப் பதிப்பில் குறிப்பிட்ட அந்த காட்சியில் சில திருந்தங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தை முடித்தக் கையோடு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகளில் இருக்கிறார் எஸ்.கே! இந்தப் படத்தை முடித்தப் பிறகு `டான்’ சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…