இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்காளதேசத்தினர் 6 பேர் கைது

கவுகாத்தி,

வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களை தடுக்க எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்காளதேசத்தினர் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவின் அசாம் மாநிலத்திற்குள் நுழைய முயன்ற 2 பெண்கள் உள்பட வங்காளதேசத்தினர் 6 பேரை அசாம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் வங்காளதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.