ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் தொடங்கியது. பகல் இரவு ஆட்டமாக பிங்க் பாலில் இந்த போட்டி நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஸ்டார்க்கின் வேகப்பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்நிலையில் முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவின் லபூஷன் மற்றும் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். டிராவிஸ் ஹெட் 141 பந்துகளில் 140 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார்.
கிட்டத்தட்ட இந்திய அணியின் வெற்றியை டிராவிஸ் ஹெ பரித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் சிறப்பாக வந்து வீசியது போல இந்திய அணில் பும்ராவை தவிர வேற யாரும் அவ்வளவு சிறப்பாக பந்து வீசவில்லை. குறிப்பாக இரண்டு புறமும் ஸ்விங் செய்யும் திறன் தற்போதுள்ள பவுலர்களுக்கு இல்லை. இதன் காரணமாக இந்திய அணி பவுலிங்கில் மிகவும் தடுமாறியது. சிராஜ் மற்றும் ஹர்திக் ராணா நன்றாக பந்துவீசினாலும் ரன்களை வாரி வழங்கி உள்ளனர். 150 ரன்களுக்கும் அதிகமாக ஆஸ்திரேலியா லீட் எடுத்துள்ளது. இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.
MOHAMMED SHAMI IN BGT
– Shami is likely to be available for the final 2 Tests against Australia in Border Gavaskar Trophy. [PTI] pic.twitter.com/y9mIzhXCEG
— Johns. (@CricCrazyJohns) December 7, 2024
இந்திய அணியில் இணையும் முகமது ஷமி
2023 ஒரு நாள் உலக கோப்பைக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் ஓய்வில் இருந்து வருகிறார் ஷமி. காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர் தற்போது முழு ஓய்வில் இருக்கிறார். சமீபத்தில் மீண்டும் தனது பந்து வீச்சு பயிற்சியை ஆரம்பித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபியில் பந்துவீசி இருந்தார். அதனை தொடர்ந்து சையத் முஷ்டாக் அலி டிராபியின் (SMAT) அனைத்து போட்டிகளிலும் விளையாடி உள்ளார். SMAT டி20 லீக் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 8 விக்கெடுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய தொடரில் ஷமி இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் என்னும் முழுவதுமாக குணமடையாததால் அவரை தற்போது தொந்தரவு செய்ய வேண்டாம் என்று பிசிசிஐ மருத்துவ குழு தெரிவித்தது.
இதன் காரணமாக அவர் பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஷமி இணையலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்குள் முழுவதுமாக குணம் அடைவார் என்று மருத்துவ குழு தெரிவித்துள்ளதாக பிசிசிஐ தரப்பில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷமி கடுமையான டயட் பின்பற்றி, கிட்டத்தட்ட ஆறு கிலோ எடையை குறைந்துள்ளதாக NCA தெரிவித்துள்ளது. முன்னதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ” ஷமி நிறைய உள்நாட்டு போட்டிகளில் விளையாடுகிறார். பிரிஸ்பேன் மிகவும் சீக்கிரமாக இருக்கலாம் ஆனால் நிச்சயமாக ஷமி மெல்போர்ன் மற்றும் சிட்னிக்கு வரலாம்” என்று பேசி இருந்தார்.