Pragya: “எந்த பெண்ணுக்கும் இந்த கொடுமை நடக்கக்கூடாது..'' -டீப் ஃபேக் வீடியோ குறித்து நடிகை பிரக்யா

ஜீவா நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ‘வரலாறு முக்கியம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரக்யா நாக்ரா.

இப்படத்தைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரக்யா நாக்ராவின் டீப் ஃபேக் ( fake video) வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. கடந்த இரண்டு நாள்களாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் தற்போது இது குறித்து பிரக்யா நாக்ரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

பிரக்யா நாக்ரா

அந்தப் பதிவில், “எனக்கு இன்னும் ஏதோ ஒரு கெட்ட கனவில் இருப்பது போல் இருக்கிறது. டெக்னாலஜி நம் வாழ்க்கையை மேம்படுத்த கண்டுபிடிக்கப்பட்டது இப்படி நாசமாக்க இல்லை. AI மூலம் இந்த மாதிரியான செயல்களை செய்பவர்களைப் பார்த்து பரிதாபமாக தான் இருக்கிறது. இந்த மாதிரியான நேரத்தில் நான் மன உறுதியுடன் இருக்க முயற்சிக்கிறேன்.

எனக்கு ஆதரவு தெரிவித்து என் பக்கம் நின்றவர்களுக்கு நன்றி. எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நடக்கக் கூடாது என வேண்டிக்கொள்கிறேன். இதுபோன்ற AI எடிட் ஆபாச வீடியோக்களால் பெண்கள் பாதிக்கப்படாத அளவுக்கு சைபர் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.