புதுச்சேரி: புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் எம்டிஆர் ராமசந்திரன் (94) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதியில் எம்எல்ஏவாக கடந்த 1969-ல் வென்று திமுக சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவையில் ராமசந்திரன் நுழைந்தார். அவர் 1969 முதல் 1974 வரை திமுக – இடதுசாரி ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அதைத்தொடர்ந்து 1974 முதல் 1977 வரை அதிமுக அரசிலும் அமைச்சராக இருந்தார்.
பின்னர் 1980 முதல் 1983 வரை திமுக அரசில் முதல்வராக இருந்தார். 1984 முதல் 1994 வரை திமுக மாநில அமைப்பாளராக இருந்தார். பின்னர் 1994 முதல் 1997 வரை அதிமுக மாநில அமைப்பாளராக இருந்தார். அதைத்தாடர்ந்து 1990 முதல் 1991 வரை திமுக – ஜனதாதளக் கூட்டணியில் முதல்வராக இருந்தார். பின்னர் 2001 முதல் 2006 வரை சட்டப்பேரவைத் தலைவராக இருந்தார். கடந்த 2006 முதல் காங்கிரஸில் இருந்தார்.
வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார். அண்மையில் வீட்டில் விழுந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.