அதானி விவகாரம்: "பக்குவமும் இல்லை; அறிவுத் திறனும் இல்லை" – அண்ணாமலையைத் தாக்கும் செந்தில் பாலாஜி

கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள பொது மக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மேற்கு பகுதி, தெற்கு பகுதி வார்டுகளில் பொதுமக்களிடம் மின்சாரம், மதுவிலக்கு ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

அதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “அதானி நிறுவனம் குறித்தும், மின்சார கொள்முதல் குறித்தும் தெளிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புரியவில்லை என்றால் மீண்டும் படித்துத் தெரிந்து கொள்ளலாம். படித்தும் புரியவில்லை. பக்குவமும் இல்லை. அறிவுத் திறனும் இல்லை. அவர்கள் குறிப்பிடுவது கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம். அதுவும், உச்ச நீதிமன்றம் வரை சென்று அங்கு தடையாணை வழங்கவில்லை. அதனால், நிதி விடுவிக்கப்பட்டது. ஆனால், நாங்கள் ஏதோ ஒப்பந்தம் போட்டது போலத் தோற்றத்தை உருவாக்க முயல்கின்றனர். அது ஒருபோதும் எடுபடாது. மக்கள் நலத்திட்டங்கள் காரணமாக, அரசுக்கு ஆதரவு பெருகி வருகிறது. வரும் தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் மு.க. ஸ்டாலின் முதல்வராவார்.

செந்தில் பாலாஜி

தமிழ்நாடு அரசு மின்சார கொள்முதல் தொடர்பாக மத்திய மின் அமைப்புடன்தான் ஒப்பந்தம் போட்டது. எந்த தனியார் அமைப்புடனும் ஒப்பந்தம் போடவில்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிர்வாக ரீதியாகவும், நிதிநிலைமை ரீதியாகவும் முற்றிலும் சீர்குலைந்திருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை அடுத்தடுத்த நிர்வாகச் சீர்திருத்த மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மூலம், இன்றைக்குத் தமிழ்நாடு மின்சார வாரியத்தைத் தலைநிமிர வைத்துள்ளவர் முதலமைச்சர். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படி அடிப்படை உண்மை கிஞ்சித்தும் இல்லாத பொய்க் குற்றச்சாட்டுகளை எதையாவது சொல்ல வேண்டும், விமர்சிக்க வேண்டும், களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் தொடர்ந்து பூதக்கண்ணாடி போட்டு அவதூறு பரப்பி வருகின்றனர். அவையெல்லாம் தோல்வி அடைந்து வருவதால் விரக்தியில் இதுபோன்ற மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிக்கைகளை விடுகின்றனர்.

சரியான கருத்தாக இருந்தால் இந்த அரசு அது பற்றிப் பரிசீலிக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஏதாவது, தி.மு.க ஆட்சி மீது புகார் கூற வேண்டும் என்பதற்காகப் பூதக்கண்ணாடி போட்டு எதிர்க்கட்சிகள் பொய்யான அறிக்கைகளை வெளியிடுகின்றன. விமர்சனங்களைக் கண்டு தி.மு.க ஒரு போதும் அஞ்சாது. அது பற்றிச் சிந்திப்பதும் கிடையாது. இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் மின்சார வினியோகம் செய்வது, அதாவது ரூ. 2.61 என்ற குறைந்த விலையில் வழங்குவது தமிழ்நாடு அரசு மட்டும்தான்.

அண்ணாமலை

தரம் குறைந்த வார்த்தைகளில் என்னைக் குறித்து, ‘ஜாமீன் அமைச்சர்’ என்று ஒருவர் குறிப்பிட்டதைப் பற்றிக் கேட்கிறீர்கள். பா.ஜ.க-வில் எத்தனை பேர் ஜாமீனில் வந்துள்ளனர்… எத்தனை பேர் சிறைக்குச் சென்று அமைச்சர்களாக உள்ளனர் என்று தெரியுமா? அவர்கள் எல்லாம் ஜாமீன் அமைச்சர்களா?. லண்டனுக்குப் படிக்கச் சென்றது 11 பேர். அதில், ஒருவரை மட்டும் பெரிதுபடுத்துகிறீர்கள். 11 நபர்கள் இந்த பயிற்சிக்காகச் சென்றார்கள். மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரி, 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் சென்றனர். ஒருவரை மட்டும் பெரிது படுத்துவது ஏன்? இந்த படிப்பினால் ஏதோ பெரிய மாற்றம் வந்துவிட்டது போலச் செய்திகளை வெளியிடுகின்றனர்” என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.