வங்கக்கடலில் உருவான, ‘ஃபெஞ்சல்’ புயல், நவம்பர் 30 அன்று கரையைக் கடந்தது. இதன் காரணமாக, புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், திருவண்ணாமலையிலுள்ள அண்ணாமலையார் மலையின் கிழக்குப் பக்கத்தில், வ.உ.சி., நகர் பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. மண் சரிவு, வெள்ளம் காரணமாக வீடுகள் புதைந்ததில், ஐந்து குழந்தைகள் உள்ளிட்ட ஏழு பேர் இதில் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், இன்று (டிசம்பர் 9) சென்னை விமான நியலையத்தில் நடிகர் ரஜினிகாந்த செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திருவண்ணாமலையில் மண்சரிவில் 7 பேர் இழந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, அதிர்ச்சியடைந்த நடிகர் ரஜினிகாந்த், “எப்போ?” எனக் கேட்டு அறிந்துகொண்டு, ‘O my god … sorry’ எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து கூலிப் படத்தின் அடுத்தக்கட்டப் பாடப்பிடிப்பு நடந்துவருவதாகத் தெரிவித்த அவர், “கூலிக்குப் பிறகு இப்போதைக்கு வேறு இல்லை” எனக் குறிப்பிட்டார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…