தனிமனித சுய ஒழுக்கமின்றி வெளியில் ஒழுக்கத்தைக் காட்டிக்கொள்வதில் பயனில்லை : சாரணர் இயக்கத்தின் மனப்பாங்கு நாட்டுக்கு மிக அவசியம் – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
தனிமனித சுய ஒழுக்கமின்றி வெளியில் ஒழுக்கத்தைக் காட்டிக்கொள்வதில் பயனில்லை என்றும், சாரணர் இயக்கத்தின் ஒழுக்கமான மனப்பாங்கு நாட்டுக்கு மிக முக்கியமானது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இலங்கை சாரணர் இயக்கத்தினால் அலரிமாலிகையில்; ஏற்பாடு செய்யப்பட்ட ‘தேசிய சாரணர் விருதுகள் வழங்கும் விழா – 2024’ இல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை சாரணர் இயக்கத்திற்காக 05 வருடங்களுக்கும் மேலாக தன்னார்வத் தொண்டாற்றிய, நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் சேர்ந்த, 574 வயது முதிர்ந்த சாரணர் தலைவர்களுக்கு இங்கு விருதுகள் வழங்கப்பட்டன. உலகின் பிற நாடுகளுடன் காணப்படுகின்ற நட்புறவை மேம்படுத்திக்கொள்வதற்காக அந்த நாடுகளைச் சேர்நத 11 சாரணர் ஆணையாளர்களுக்கும் ‘சர்வதேச நட்புறவு விருது’ (ஐNவுநுசுNயுவுஐழுNயுடு குசுஐநுNனுளுர்ஐP யுறுயுசு) வழங்கப்பட்டது.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
குழந்தைகளை நல்ல குடிமக்களாக உருவாக்குவதே சாரணர் இயக்கத்தின் நோக்கமாகும். அந்த இலக்கு எமது அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமானது, இந்த நாட்டின் குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும். நல்ல வாய்ப்புக்கள் எனும்போது, குழந்தைகளின் ஆளுமைத்திறனை வளர்த்துக்கொள்ளவும், அவர்களின் திறன்களை தடையின்றி வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்புகளை வழங்குவதுமாகும்.
சாரணர் பயிற்சி குழந்தைகளின் மனதில் நல்ல சூழலை உருவாக்குகிறது. சவால்களை எதிர்கொள்ள கற்றுக்கொள்கிறது. எமது அரசாங்கத்தின் தூய்மையான இலங்கைத் (ஊடநநn ளுசடையெமய) திட்டத்துடன் சாரணர் இயக்கத்தை இணைக்குமாறு சாரணர் ஆணையாளர் கோரிக்கை விடுத்தார். அது குறித்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம். தூய்மையான இலங்கைத் திட்டம் (ஊடநநn ளுசடையெமய) என்பது சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்துவது மட்டுமல்லாது நாட்டின் அனைத்துச் செயற்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துவதாகும். சாரணர் இயக்கத்தில் உள்ள மதிப்புகள் மற்றும் மனப்பான்மைகளைப் போலவே கூட்டுத்துவமும் முக்கியமானது. ஒரு நோக்கத்திற்கான நேர்மை, பொறுப்புகளுக்கான அர்ப்பணிப்பு, ஒரு பொதுவான இலக்கை உறுதி செய்யும் திறன், இவை அனைத்தும் ஒழுக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. பாடசாலை மட்டத்தில் சாரணர் இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் சபுதந்திரி, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவௌ, இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம சாரணர் ஆணையாளர், சட்டத்தரணி ஜனப்ரித் பெர்னாண்டோ மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.