சன் டிவியில் பிற்பகலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் லட்சுமி. நடிகர் சஞ்சீவ், ஸ்ருதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வந்த இந்த சீரியல் கடந்த மார்ச் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
பகல் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஓரளவு வரவேற்பை பெற்ற தொடர் என்றும் இதனை சொல்கிறார்கள்.
இந்த நிலையில் இந்தத் தொடரிலிருந்து நடிகர் சஞ்சீவ் சில தினங்களுக்கு முன் வெளியேறினார். அவருக்குப் பதில் தற்போது நடிகர் எஸ்.எஸ்.ஆர்.. ஆர்யன் கமிட் ஆகியுள்ளார்.
தொடரிலிருந்து சஞ்சீவ் வெளியேறியதற்கான காரணம் குறித்துப் பலரும் பலவிதமாகப் பேசி வந்தனர். தொடர் தொடங்கி சில மாதங்களே ஆன நிலையில் ஹீரோ வெளியேறியதால் இத்தகைய பேச்சுகள் எழுந்தன. சிலர் சஞ்சீவ் ஷூட்டிங்கிற்கு போதிய ஒத்துழைப்பு தராததால் தயாரிப்பு தரப்பே அவரை மாற்றி விட்டதாகச் சொன்னார்கள். சீரியல் யூனிட்டுடன் அவருக்கு சில பிரச்னைகள் இருந்ததால்தான் இந்த மாற்றமென சிலர் கூறிவந்தனர். இந்நிலையில், உண்மையான காரணத்தை அறிய மேற்படி சீரியல் தொடர்புடைய சிலரிடமே பேசினோம்.
”டிவியில் நீண்ட காலமா இருந்துட்டு வர்றவர் சஞ்சீவ். ‘திருமதி செல்வம்’ முதலான சீரியல்கள் மூலம் சன் டிவி, ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட தொடர்கள் மூலம் ஜீ தமிழ், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் விஜய் டிவி என அத்தனை முன்னணி சேனல்களிலும் வந்துட்டாலும் இப்பவும் சீரியல்கள்ல நடிச்சிட்டிருந்தான் இருக்கார். ‘லட்சுமி’ சீரியல்ல அவரும் ஸ்ருதி ராஜும் சேர்ந்து நடிச்சாங்க. ‘திருமதி செல்வம்’ தொடர்ல நடிச்ச ரிந்தியாவும் இந்த தொடர் மூலமா மீண்டும் சஞ்சீவ் கூட நடிச்சாங்க.
சீரியல் நல்லாப் போயிட்டிருந்த நிலையில சில நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லைனு ஷூட்டிங்கிற்கு லீவு எடுத்தார்.
அதனால சில தினங்கள் கதையை வேற ட்ராக்ல கொண்டு போனாங்க. ஆனாலும் தொடர்ந்தும் தன்னால் ஷூட்டிங் வரமுடியலைனு சொல்லியிருக்கார்.
என்ன செய்வதுனு சேனல் மற்றும் தயாரிப்புத் தரப்பு யோச்சிட்டிருந்தப்பதான், அவரே தொடர்பு கொண்டு, தன்னால் சீரியலின் ஒளிபரப்பு எந்தவிதத்துலயும் பாதிக்கப் பட வேண்டாம்னு சொல்லி, தனக்குப் பதிலா வேறொரு நடிகரைக் கமிட் செய்துக்கச் சொல்லியிருக்கார். உடனே எஸ்.எஸ்.ஆர். ஆர்யன் சஞ்சீவுக்குப் பதிலாக கமிட் செய்யப்பட்டுட்டார்” என்கிறார்கள் இவர்கள்.