இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவையானது யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் 2024.12.10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பிப 4.00 மணிவரை நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அறிவித்துள்ளார்.
மேலும், இதுவரை பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொள்ளாதவர்கள் உரிய ஆவணங்களுடன் வந்து பெற்று பயனடையுமாறு கேட்டுள்ளார்.