iPhone SE 4…. விரைவில் வருகிறது ஆப்பிளின் பட்ஜெட் ஐபோன்… முழு விபரம் இதோ

பிரீமியம் வகை போன்களான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை வாங்குவது என்பது பலரின் கனவாக இருக்கும். ஐபோன்கள் கவுரவம் மற்றும் பெருமை தரும் விஷயமாக பார்க்கப்படுவதே இதற்கு காரணம். எனினும், ஐபோன்களின் விலை லட்சங்களில் இருப்பதால் எல்லோராலும் வாங்க முடியும் நிலை இல்லை. இந்நிலையில், பட்ஜெட் போன் வாங்க நினைப்பவர்களுக்கு  மகிழ்ச்சியைக் கொடுக்கும் வகையில் ஆப்பிள் பட்ஜெட் விலையில், தனது புதிய iPhone SE வகை போன்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.  

ஆப்பிள் தனது பட்ஜெட் போனான iPhone SE 4 மாடலை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அடுத்த தலைமுறை iPhone SE வகை போன்கள் 2025 மார்ச் மாதத்தில் அறிமுகமாகலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. அறிமுக தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், 2025ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ள iPhone SE 4  மாடல்  2022ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட iPhone SE 3 மாடலை விட சிறந்த அம்சங்களை கொண்டதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேம்பட்ட ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்களுடன் SE 4 மாடல், ஆப்பிளின் மிகவும் மலிவு விலை மாடலாக இருக்கலாம்.

ஆப்பிளின் வரவிருக்கும் iPhone SE 4 மாடலில் ஐபோன் 16  மாடலில் உள்ள அதே பின்புற கேமரா இருக்கலாம் என்கின்றனர். நான்காவது தலைமுறை iPhone SE போனில் 48 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் TrueDepth முன் கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கேமரா அமைப்பு iPhone 16 பின்புற கேமராவைப் போன்றது, 48 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் லென்ஸுடன், ஆப்பிள் “ஃப்யூஷன் லென்ஸ் உள்ள இது சிறந்த வகையில் புகைப்படம் எடுக்க உதவும்.

iPhone SE 4 விலை குறித்த தகவல்

 iPhone SE 4 க்கான கேமரா தொகுதியின் முக்கிய சப்ளையராக கொரியாவை தளமாகக் கொண்ட LG Innotek உள்ள நிலையில், முக்கிய கேமரா கூறுகளை வழங்குவதில் Foxconn மற்றும் Cowell Electronics பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் சுமார் $400 (தோராயமாக ரூ.33,950) விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் அமலில் உள்ள கட்டணங்கள் மற்றும் பிற விஷயங்கள் காரணமாக விலை சற்று அதிகமாக இருக்கலாம்.

AI அம்சங்கள்

புதிய iPhone SE 4 புதிய வடிவமைப்பையும் கொண்டிருக்கும். இது ஐபோன் 14 போன்ற 6.06 அங்குல OLED திரையைக் கொண்டிருக்கக் கூடும் என்கின்றன தகவல்கள். இது பழைய LCD திரையை விட சிறந்தது. இந்த ஃபோனில் கைரேகை சென்சார் (டச் ஐடி)க்குப் பதிலாக ஃபேஸ் ஐடி இருக்கும், இதன் காரணமாக மொபைலின் முன் பகுதி முழுவதும் திரையாக இருக்கும்.

பிற சிறப்பு அம்சங்கள்

iPhone SE 4 மாடல் போனில் ஆப்பிள் வடிவமைத்த 5G சிப் ஆக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தவிர, iPhone SE 4 போனில், யூ.எஸ்.பி-சி போர்ட், ஆப்பிளின் மேம்பட்ட AI அம்சங்களை ஆதரிக்க 8ஜிபி ரேம், புதிய மல்டி-ஃபங்க்ஸ்னல் ஆக்ஷன் பட்டன் போன்றவை இருக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.