Flipkart End of Season Sale: ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் எண்ட் ஆஃப் சீசன் சேல் நடந்து வருகின்றது. இதில் ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung) ஆகிய பிராண்டுகளின் பிரீமியம் போன்கள், இயர்பட்கள் (Earbuds) மற்றும் மடிக்கணினிகள் போன்ற பல சாதனங்களில் பம்பர் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. பிளிப்கார்டின் இந்த விற்பனையில் உள்ள சிறந்த டீலக்ளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஐபோன், லேப்டாப். ஸ்மார்ட்போன் அல்லது இயர்பட் என இதுபோன்ற ஏதேனும் கேட்ஜெட்டை வாங்க திட்டமிட்டிருக்கும் நபர்களுக்கு இந்த விற்பனை சிறந்த வாய்ப்பாக இருக்கும். இந்த விற்பனை டிசம்பர் 13 ஆம் தேதி வரை நடக்கும் என்பதை நினைவில் கொள்வது நல்லது. இந்த சேலில் பல்வேறு பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் நல்ல அளவில் பணத்தை மிச்சப்படுத்த முடியும். Flipkart End of Season விற்பனையின் சில சிறந்த சலுகைகள் பற்றி இங்கே காணலாம்,
Flipkart End of Season விற்பனையின் சிறந்த சலுகைகள்: ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள்
சாம்சங் கேலக்சி எஸ்23 5ஜி: SAMSUNG Galaxy S23 5G
பிளிப்கார்ட்டின் Flipkart End Off Season விற்பனையில் சாம்சங்கின் Galaxy S23 5G ஐ பெரும் தள்ளுபடியுடன் வாங்க நல்ல வாய்ப்பு கிடைக்கும். சேலில் தற்போது இந்த போன் 50 சதவீத விலையில் விற்பனைக்கு வருகிறது. நிறுவனம் இந்த போனை ரூ.89,999 க்கு வழங்கியுள்ளது. எனினும், இந்த சேலில் வாடிக்கையாளர்கள் இதை வெறும் 39,999 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 50 ஆயிரம் ரூபாய் பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Apple iPhone 15 Plus: ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ்
பிளிப்கார்ட்டின் இந்த சேலில், ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ் மீது பம்பர் தள்ளுபடி கிடைக்கிறது. இந்த போனை ரூ.14,901 மலிவாக வாங்கலாம். இதன் பிறகு இந்த போனின் விலை ரூ.64,999 ஆக குறைந்துவிடும். இதன் அசல் விலை ரூ.79,900 என்பது குறிப்பிடத்தக்கது.
Google Pixel 8a: கூகுள் பிக்சல் 8எ
கூகுள் பிக்சல் 8a போனும் பம்பர் சலுகையாக ரூ.19 ஆயிரம் குறைந்த விலையில் கிடைக்கிறது. நிறுவனம் இந்த போனை ரூ.59,999 -க்கு அறிமுகம் செய்திருந்தது, ஆனால் இப்போது நீங்கள் இதை வெறும் ரூ.40,999க்கு இந்த விற்பனையில் வாங்க முடியும். இது மட்டுமின்றி, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ.2,000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.
boAt Airdopes Alpha: போட் ஏர்டோப்ஸ் ஆல்பா
போட் இயர்பட்கள் பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் மிகவும் மலிவாகக் கிடைக்கின்றன. மேலும் இந்த இயர்பட்களுக்கு நிறுவனம் 77% வரை தள்ளுபடி வழங்குகிறது. அதன் பிறகு இதன் விலை வெறும் ரூ.799 ஆகக் குறைந்துள்ளது. இதன் அசல் விலை ரூ.3,490 என்பது குறிப்பிடத்தக்கது.
Lenovo Intel Core i7 12th Gen 1255U: லெனோவா இன்டெல் கோர் i7 12வது ஜெனரல் 1255U
ஃப்ளிப்கார்ட்டின் எண்ட் ஆஃப் சீசன் விற்பனையில் லெனோவா லேப்டாப்கள் பெரும் தள்ளுபடியில் கிடைக்கும். இந்த விற்பனையில் ரூ.90,000 மதிப்புள்ள லேப்டாப் வெறும் ரூ.50,990 வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கான மிகச் சிறந்த தள்ளுபடியாக கருதப்படுகின்றது.