மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் 2 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி நாளை நடக்கிறது.
இந்த தொடர் நிறைவடைந்ததும் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் 3 ஆட்டங்களும் வெல்லிங்டனில் நடக்கிறது.
இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு அலிசா ஹீலி கேப்டனாகவும், தஹ்லியா மெக்ராத் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் 21 வயது இளம் வீராங்கனையான ஜார்ஜியா வோல் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் ஜார்ஜியா வோல் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலிய அணி விவரம்; அலிசா ஹீலி (கேப்டன்), தஹ்லியா மெக்ராத் (துணை கேப்டன்), டார்சி பிரவுன், ஆஷ்லே கார்ட்னர், கிம் கார்த், அலனா கிங், போப் லிட்ச்பீல்ட், சோபி மோலினக்ஸ், பெத் மூனி, எல்லிஸ் பெர்ரி, மேகன் ஷட், அன்னபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வோல், ஜார்ஜியா வரேகம்.