இதுவரை பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன்; தலைமையில் நேற்றைய தினம் காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 03.00 மணி வரை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இந் நடமாடும் சேவையினை அரசாங்க அதிபர் அவர்களுடன் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் திருமதி. நில்மினி ஹேரத் அவர்களும், பணிப்பாளர் திருமதி இரேஷ தர்மசேனா அவர்களும் மற்றும் ருNகுPயு நிறுவனத்தின் ஆலோசகர் செல்வி. உதேனி தேவப்பெரும அவர்களும் அவதானித்ததுடன், பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழை களை பயனாளிகளுக்கு வழங்கியும் வைத்தார்கள்.
இன்றைய நடமாடும் சேவையில் காலங்கடந்த பிறப்பு பதிவு 52 சிறுவர்களுக்கும், உத்தேச வயதுப்பத்திரம் 06 பேருக்கும், பிறப்புச் சான்றிதழ் திருத்தம் 14 பேருக்கும், இறப்பு பதிவு 04 பேருக்குமாக 76 பயனாளிகள் பயனடைந்தார்கள்.
இவ் நடமாடும் சேவையில், வட மாகாண பிரதிப் பதிவாளர் நாயகம் திரு.கே.நடராஜா, மாவட்ட மற்றும் பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.