“ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதி செய்யக்கூடிய ஆற்றல் மிக்க தொழில் முயற்சியாளர்களுக்காக பழங்கள் மற்றும் மரக்கறிகளைப் பொதி செய்தல் தொடர்பாகத் தெளிவுபடுத்தல்” நிகழ்வு அண்மையில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையில் இடம்பெற்றது.
ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) யின் கீழ் நிறுவப்பட்டுள்ள தேசிய பொதியிடல் மத்திய நிலையம் (NPC) ஆகியவற்றின் ஊடாக இந்நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.
நவீன பொதியிடல் தீர்வானது பழங்கள் மற்றும் மரக்கறிகளின் அறுவடையின் பின்னரான பாதிப்புகளை குறைப்பதன் ஊடாக பொருளாதாரத்திற்கு அவசியமான பிரதிபலனை பெற்றுக் கொள்ளும் ஏற்றுமதி உற்பத்திகளின் பெறுமதியை அதிகரிக்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இலங்கையின் அறுவடையின் பின்னரான பாதிப்புகளை கருத்தில் கொள்ள வேண்டியதுடன் அதில் மரக்கறிகளில் 20% தொடக்கம் 30% மற்றும் பழங்களில் 15% தொடக்கம் 20% வீதமான பாதிப்புகளுக்கு பொருத்தமான பொதியிடல் இன்மையே இந்த அறுவடையின் பின்னரான தாக்கத்திற்கு பிரதான காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இப் பயிற்சி நிகழ்வில் பொதியிடல் கோட்பாடுகள், அதற்கான பொருட்கள், பொதியிடல் தொடர்பான தொழில்நுட்பம், அதற்கான வடிவமைப்பு மற்றும் பழங்கள் மரக்கறிகளின் பொதியிடலுக்கான வர்ணங்கள் மற்றும் வடிவமைப்பு, செடிகளின் தரம் தொடர்பான சான்றிதழ் மற்றும் அதனைப் பெற்றுக் கொள்வதற்கான முக்கியத்துவம், பெறும் செயல்முறைகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
அத்துடன்முறையான பொதியிடலின் முக்கியத்துவம், மிகவும் வினைத்திறனான பொதியிடல் முறையை தெரிவு செய்தல் மற்றும் பொதியிடல் உற்பத்திச் செலவைத் தவிர்ப்பதற்காக சரியான பொருட்களைத் தெரிவு செய்தல் போன்ற விடயங்களுக்கான வழிகாட்டல்களும் இதன் போது வழங்கப்பட்டன.