மட்டக்களப்பில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முதலீட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (11) இடம் பெற்றது.
நவீன மயப்படுத்தப்பட்ட செயற்திட்டங்களின் மூலம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு தொழில் முயற்ச்சியாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட முன்மொழிவுகள் தெளிவூட்டப்பட்டது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.
மேலும் சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளும் போது எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக முதலீட்டாளர்கள் கருத்துகளை இங்கு பகிர்ந்துகொண்டனர்.