டர்பன்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அடுத்ததாக ஒருநாள் தொடரும், இறுதியில் டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளது.
இதில் முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான அன்ரிச் நோர்ட்ஜே காயம் காரணமாக விலகியுள்ளார்.
இவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் தயான் கலீம் அறிமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.