ஐஸ் போதைப் பொருள் மற்றும் ஹெரோயினுடன் நால்வர் கைது – கஹதுடுவை பொலிஸ் பிரிவு.

12.12.2024 அன்று இரவு வேளையில் கஹதுடுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூனமலவத்த பிரதேசத்தில் கஹதுடுவை பொலிஸ் உத்தியோகத்தர்களால் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியை பரிசோதனை மேற்கொண்ட போது ஐஸ் போதை பொருள் 5 கிராம் 140 மில்லிகிராமுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நுகேகொடை மற்றும் கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 22 மற்றும் 25 வயதுடைய நபர்களாவர்.
மேலும், சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவலுக்கமைய மூனமலவத்த பிரதேசத்திலுள்ள வீடுடொன்றை பரிசோதனைக்குற்படுத்தி ஐஸ் போதைப் பொருள் 01 கிலோ 50 கிராமும் மற்றும் ஹெரோயின் 835 கிராமுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கிருலபனை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் என்பதுடன், கஹதுடுவை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.