யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பரவிவரும் காச்சல் தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினர் நேற்றைய தினம் (12) யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
அண்மையில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அதிகளவான நோயாளர்கள் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் சமூக மருத்துவ ஆலோசகர் பிரபா அபயக்கோண் தலைமையிலான குழுவினர் பருத்தித் துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்று அங்கு வைத்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிலைமைகளை ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.