சென்சூரியன்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடந்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி சென்சூரியனில் இன்று நடக்கிறது. இதையடுத்து இந்த ஆட்டத்தில் விளையாடும் வீரர்களை (ஆடும் லெவன்) பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணியில் ஒரே ஒரு மாற்றமாக கடந்த ஆட்டத்தில் இடம் பெற்ற சுபியான் முகீமுக்கு பதிலாக ஜஹந்தத் கான் இடம் பெற்றுள்ளார்.
பாகிஸ்தான் ஆடும் லெவன் விவரம்; முகமது ரிஸ்வான் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), பாபர் அசாம், சைம் அயூப், உஸ்மான் கான், தையப் தாஹீர், முகமது இர்பான் கான், முகமது அப்பாஸ் அப்ரிடி, ஷாகீன் ஷா அப்ரிடி, ஜஹந்தத் கான் , ஹாரிஸ் ரவூப், அப்ரார் அகமது.