மும்பை ஒரே மாதத்தில் 2 ஆம் முறையாக ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு ரஷ்ய மொழியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை நகரில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு ஒரே மாதத்தில் 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் நேற்று மதியம் ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு வந்துள்ளது. மும்பை காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே நவம்பர் 16-ம் தேதி, […]