செம்​பரம்​பாக்​கம், பூண்டி, புழல் ஏரிகளில் உபரிநீர் திறப்பு: துணை முதல்வர் உதயநிதி ஆய்வு

காஞ்​சி/செங்கை/திரு​வள்​ளூர்: காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு, திரு​வள்​ளூர் மாவட்​டங்​களில் பெய்து வரும் கனமழை காரண​மாக, ஏரிகளில் நீர்​வரத்து அதிகரித்​தபடி உள்ளது. இதனால் செம்​பரம்​பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 4,500 கன அடி உபரிநீரும், பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 16,500 கன அடி உபரநீரும் திறந்​து​விடப்​பட்​டுள்​ளது. இதனால் அப்பகு​தி​களில் உள்ள மக்கள் வெளி​யேற்​றப்​பட்டு வருகின்​றனர். செம்​பரம்​பாக்​கம், பூண்டி ஏரிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் ஆய்வு செய்​துள்ளார்.

காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக செம்​பரம்​பாக்கம் ஏரிக்கு நீர்​வரத்து அதிகரித்​தது. இதன் காரணமாக செம்​பரம்​பாக்கம் ஏரியின் மொத்த நீர் மட்டம் 24 அடியாக உயர்ந்​தது. ஏரியின் மொத்த கொள்​ளளவு 3,453 மில்​லியன் கன அடி என்ற நிலை​யில் ஏரிக்கு விநாடிக்கு 6,498 கன அடி நீர் வந்து கொண்​டிருந்​தது. ஏரி முழு கொள்ளவை எட்டும் நிலை​யில் இருந்​த​தால் முதல் கட்டமாக 1,000 கன அடி உபரி நீர் காலை​யில் திறக்​கப்​பட்​டது. இதனைத் தொடர்ந்து இந்த நீர் திறப்​பின் அளவு 4,500 கனஅடியாக அதிகரிக்​கப்​பட்​டது.

இதனைத் தொடர்ந்து அடையாறு ஆற்றங்​கரையோரம் வசிக்​கக்​கூடிய மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்​பட்​டது. இந்த ஏரியில் 5 கண் மதகில் 2 மற்றும் 4 ஆகிய 2 செட்​டர்கள் திறக்​கப்​பட்டு அதன் வழியாக தொடர்ந்து தண்ணீர் வெளி​யேற்​றப்​பட்டு வருகிறது. பொது​மக்கள் யாரும் உள்ளே வராத வகையில் ஏரிக்​குச் செல்​லும் அனைத்து வாயில்​களும் பூட்​டப்​பட்டு போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டது.

செம்​பரம்​பாக்கம் ஏரியை ஆய்வு செய்​கிறார் துணை ​முதல்வர் உதயநிதி ஸ்​டா​லின்.
உடன் அமைச்​சர் ​தா.மோ.அன்​பரசன், ஆட்​சியர் கலைச்செல்வி.

துணை முதல்வர் ஆய்வு: செம்​பரம்​பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்​பட்​டதைத் தொடர்ந்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் செம்​பரம்​பாக்கம் ஏரியில் ஆய்வு மேற்​கொண்​டார். அப்போது ஏரியின் நிலவரம், வெளி​யேற்​றப்​படும் நீரின் அளவு ஆகிய​வற்றை அதிகாரி​களிடம் கேட்​டறிந்​தார்.

இந்த ஆய்வின்​போது அமைச்சர் தா.மோ.அன்​பரசன், காஞ்​சிபுரம் ஆட்சியர் கலைச்​செல்வி மற்றும் பொதுப்​பணித் துறை அதிகாரிகள் உடன் இருந்​தனர்.சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 3,300 மில்​லியன் கன அடி கொள்​ளள​வும், 21.20 அடி உயரமும் கொண்​டது.

நேற்று காலை காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 1,042 கன அடி மழைநீர் வந்து கொண்​டிருக்​கிறது. புழல் ஏரியில் 2,956 மில்​லியன் கன அடி நீர் இருப்பும், 19.72 அடி நீர் மட்ட​மும் உள்ளது. முன்னெச்​சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலை 9 மணியள​வில், புழல் ஏரியில் இருந்து, விநாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்​கப்​பட்​டுள்​ளது. புழல் ஏரி உபரி நீர் கால்​வாய் கரையோரம் உள்ள நாரவாரி​குப்​பம், வடகரை, கிராண்ட் லைன், புழல், வடபெரும்​பாக்​கம், மஞ்சம்​பாக்​கம், கொசப்​பூர், மணலி மற்றும் சடையான்​குப்பம் பகுதி​களில் தாழ்வான பகுதி​களில் வசிக்​கும் பொது​மக்கள் பாது​காப்பாக இருக்​கு​மாறு அறிவுறுத்​தப்​பட்​டுள்​ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு 6,000 கனஅடி மழைநீர் வருவதால் ஏரியின் முழு கொள்ளளவான
24 அடியில் 23.29 அடி நிரம்பியுள்ள நிலையில், உபரி நீர் நேற்று திறக்கப்பட்டது.
படம்: எம்.முத்துகணேஷ்

பூண்டி ஏரியின் பாது​காப்பு கருதி, முன்னெச்​சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏரியில் நேற்று முன் தினம் மதியம் 1.30 மணி முதல் உபரி நீர் திறக்​கப்​பட்டு வருகிறது. உபரிநீர் திறப்​பின் அளவு, தொடக்​கத்​தில் விநாடிக்கு 1,000 கன அடி, நேற்று முன் தினம் மாலை 5 மணியள​வில் விநாடிக்கு 5,000 கன அடி, நேற்று காலை 6.30 மணியள​வில் விநாடிக்கு 12,000 கன அடி, காலை 10.30 மணியள​வில், விநாடிக்கு 16,500 கன அடி என்று அதிகரிக்​கப்​பட்​டுள்​ளது.

3,231 மில்​லியன் கன அடி கொள்​ளளவு மற்றும் 35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 3,204 மில்​லியன் கன அடியாக​வும், நீர் மட்ட உயரம், 34.99 அடியாக​வும் இருந்​தது. பூண்டி ஏரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் ஆய்வு செய்​தார்.

பிச்​சாட்​டூர் அணை: திரு​வள்​ளூர் மாவட்​டம்- ஊத்துக்​கோட்​டையி​லிருந்து, சுமார் 16 கிமீ, தொலை​வில் உள்ள பிச்​சாட்​டூர் அணைக்கு, நீர்ப்​பிடிப்பு பகுதி​களில் இருந்து நீர்​வரத்து அதிகரித்​தது. 1.85 சிஎம்சி கொள்​ளளவு கொண்ட பிச்​சாட்​டூர் அணையில் இருந்து வெளி​யேற்​றப்​படும் உபரிநீர் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்​தது.

அதே நேரத்​தில், பிச்​சாட்​டூர் அணையின் உபரி நீரோடு, ஊத்துக்​கோட்டை, பொன்னேரி வட்டங்​களில் பெய்த மழைநீரும் ஆரணி ஆற்றில் பெருக்​கெடுத்து ஓடுகிறது. நேற்று மாலை 5 மணி நிலவரப்​படி, விநாடிக்கு 12,000 கன அடி என, ஓடுகிறது. ஆரணி கரையோரம் உள்ள பேரண்​டூர், பேரிட்​டிவாக்​கம், காரணி, புது​வாயல், ஏலியம்​பேடு, லட்சுமிபுரம், காட்​டூர், ஆண்டார்​மடம் உள்ளிட்ட கிராமங்​களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்​பட்​டுள்​ளது.

மழைநீர் வரத்து காரணமாக புழல் ஏரியிலிருந்து நேற்று காலை முதல் இரு மதகுகள்
மூலம் விநாடிக்கு 500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. | படம்: ம.பிரபு |

காஞ்​சி மாவட்​டத்​தில் மாங்​காடு நகராட்​சிக்கு உட்பட்ட ஓம்சக்தி நகரில் அனைத்து பகுதி​களி​லும் அதிக அளவு மழைநீர் தேங்​கி​யுள்​ளது. காஞ்சி, செங்​கல்​பட்டு மாவட்​டங்​களில் நீர்​வளத் துறை பராமரிப்​பில் உள்ள 489 ஏரிகள் முழு​மையாக நிரம்​பி​யுள்ளன. மதுராந்​தகம் பகுதி​யில் மாம்​பாக்கம் மற்றும் பாக்கம் பகுதி​களில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளி​யேறி வருவ​தால், தென் மாவட்​டங்​களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் மதுராந்​தகம் அருகே 30 கிமீ வேகத்​தில் இயக்​கப்​பட்டன. இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக ரயில்கள் சென்​றடை​யும் நிலை ஏற்பட்​டது.

மதுராந்​தகம் அருகே கிளி​யாற்றில் ஏற்பட்ட வெள்​ளப்​பெருக்கால் பவுஞ்​சூர் மற்றும் தச்சூர் செல்​லும் சாலை​யில் உள்ள தரைப்​பாலம் ​முழ்கிய நிலை​யில், அச்​சாலை​யில் பயணி​களு​டன் வந்த தனி​யார் பேருந்து வெள்​ளத்​தில்​ சிக்​கியது. அப்​பகுதி மக்​கள்​ பயணிகளை க​யிறு மூலம்​ மீட்​டனர்​. விளை நிலங்​கள்​ தண்​ணீரில்​ ​முழ்​கி, ​விவசா​யிகள்​ பா​திக்​கப்​பட்​டுள்​ளனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.