போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதியமைச்சர் ஜனித்த ருவன் கொடிதுவக்கு ஆகியோர் நேற்று (13) கொழும்பு துறைமுகத்திற்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
அங்கு கிழக்கு கொள்கலன் முனையம், மேற்கு கொள்கலன் முனையம், ஜய கொள்கலன் முனையம், CICT, SAGT ஆகிய அனைத்து முனையங்களையும் பார்வையிட்ட அமைச்சர், ஊழியர்களின் பிரச்னைகள் கலந்துரையாடினார்.
அனைத்து முனையங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த அமைச்சர், இதனை கவர்ச்சிகரமான துறைமுகமாக மாற்ற தேவையான ஊக்குவிப்புகளை வழங்கியதுடன், கப்பல்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், கொள்கலன்களின் அளவை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
விசேடமாக, கிழக்கு கொள்கலன்கள் முனையத்தின் பணிகள் தாமதமாகி வருவதால் ஏற்படும் நட்டம் குறித்து கேட்டறிந்த அமைச்சர், 2025 ஜூன் மாதத்திற்குள் முடிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தினார்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது அனைத்து துறை ஊழியர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்திய முக்கியமான விடயம், இந்த துறைமுகத்தின் முனையங்கள் வெவ்வேறு பெயர்களில் இயங்கினாலும் அனைவரும் ஒற்றுமையாக இது “கொழும்பு துறைமுகம்” என்று சர்வதேச ரீதில் பிரகாசிக்கக் கூடியதிக செற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.