இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha), போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை நேற்று (13) பத்தரமுல்ல, மகனெகும வளாகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்தார்.
அமைச்சருக்கும் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சிறிது நேரம் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விசேட கவனம் செலுத்தி, இந்திய உயர்ஸ்தானிகர் இங்கு உரையாற்றினார்.
அண்டை நாடான இலங்கையுடன் வலுவான, நீண்டகால உறவைப் பேணுவதற்குத் தேவையான ஆதரவை இந்திய அரசு வழங்கும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.