சென்னை: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரும் அதிகரிக்கப்பட்டு உள்ளதால், ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. இது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துர் […]