இன்றைய டிஜிட்டல் யுகத்தில் டேட்டா அதிகம் கொடுக்கும் திட்டங்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. ஏனெனில், பள்ளி மாணவர்கள் முதல் வீட்டில் இருந்தே அலுவலக வேலைகளைச் செய்பவர்கள், என பல தரப்பு மக்களுக்கும் அதிவேக மொபைல் டேட்டா அதிகம் தேவைப்படுகிறது. இந்நிலையில் தினசரி டேட்டாவுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டங்களை பொறுத்தவரை, ஏர்டெல் மிகவும் மலிவான கட்டணத்தில் கொண்டுவந்துள்ள புதிய ப்ரீபெய்ட் திட்டம் வாடிக்கையாளர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளது
ஏர்டெல் கொண்டு வந்துள்ள ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் ரூ.398 கட்டணத்தில் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் குறிப்பாக அதிவேக இணையம் மற்றும் நல்ல பொழுதுபோக்கு பேக்கை விரும்பும் பயனர்களுக்கானது. இந்த திட்டத்தின் கீழ், பயனர்கள் பல நன்மைகளைப் பெறுகிறார்கள்.
ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ரூ.398 கட்டணத்திலான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் பயனர்களுக்கு வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்பு வசதிகள் கிடைக்கும். பயனர்கள் தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியையும் பெறுகிறார்கள். டேட்டாவைப் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் ஏர்டெல் பயனர்கள் தினமும் 2ஜிபி 5ஜி டேட்டாவைப் பெறுகிறார்கள். இதைப் பயனர்கள் அதிவேக இணையத்தைப் பயன்படுத்தலாம்.
ஹாட்ஸ்டார் இலவச சந்தா
இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த பேக் ஹாட்ஸ்டாரின் இலவச சந்தாவை வழங்குகிறது, இதனால் பயனர்கள் லைவ் விளையாட்டுகள், திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை எளிதாகப் பார்க்கலாம். எனினும் ஹாட்ஸ்டாரின் மொபைல் திட்டம் ஒரு சாதனத்தில் மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் ஜியோ
முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவும் தனது பயனர்களுக்கு புத்தாண்டில் சிறந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் 200 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில், பயனர்கள் வரம்பற்ற அழைப்பு வசதியைப் பெறுகின்றனர். அதாவது எந்த நெட்வொர்க்கிலும் பயனர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அழைப்புகளைச் செய்யலாம். பயனர்கள் 500ஜிபி அதிவேக 4ஜி டேட்டாவையும், தினசரி வரம்பு 2.5ஜிபியுடன் வரம்பற்ற 5ஜி டேட்டாவையும் பெறுகிறார்கள்.
கடந்த ஜூலை மாதம், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், கட்டணங்களை அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்தன. இதில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டு நிறுவனங்களும் அடங்கும். தனியார் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தினாலும், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள அவ்வப்போது மலிவான கட்டணத்தில், அதிக நன்மைகளை வழங்கும் திட்டங்களைத் தொடர்ந்து கொடுத்த வண்ணம் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.