விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக ஆதவ் அர்ஜுனா இன்று அறிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை ஆறு மாதத்திற்கு இடைநீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். ஏழை எளிய அடித்தட்டு மக்களின் கட்சியாக பல ஆண்டுகளாக விளங்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் படாடோபமாக தன்னை நுழைத்துக்கொண்டு பகட்டாக வலம் வந்த ஆதவ் அர்ஜுன், “கட்சியில் ஏதோ ஒரு செயல்திட்டத்துடன் இருந்துவந்ததாக” திருமாவளவன் […]