Sunil Gavaskar, Siraj | ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் எல்லோரும் முகமது சிராஜை டார்க்கெட் வைத்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடும் பதிலடி கொடுத்திருக்கிறார். டிராவிஸ் ஹெட் விக்கெட்டை எடுத்த பிறகு முகமது சிராஜ் செய்தில் என்ன தவறு இருக்கிறது?, ஆஸி பிளேயர்கள் எல்லாம் என்ன யோக்கியமானவர்களா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து அணியின் பவுலருக்கு எதிராக இப்படி நடத்து கொண்டால், அப்போ இதைவிட சூடான பதிலடி கிடைகும் எனவும் கவாஸ்கர் கூறியுள்ளார். முதலில் என்ன பிரச்சனை என தெரிந்து கொள்வோம்.
டிராவிஸ் ஹெட் – சிராஜ் மோதல்
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. அப்போது டிராவிஸ் ஹெட் விக்கெட்டை முகமது சிராஜ் எடுத்தவுடன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தார். மேலும், டிரெஸ்ஸிங் ரூமுக்கு செல் என்ற வகையில் ஹெட்டை நோக்கி சிராஜ் சைகை செய்தார். அதனால் டிராவிஸ் ஹெட் கடுமையாக கோபமடைந்து சிராஜை திட்டினார். இது குறித்து விளக்கம் அளித்த டிராவிஸ்ஹெட் சூப்பராக பந்துவீசினாய் சிராஜ் என்று தான் ஆக்ரோஷமாக கூறினேன். அவர் தவறாக புரிந்து கொண்டார் என கூறினார். இதற்கு பதில் அளித்த சிராஜ், டிராவிஸ் ஹெட் அவ்வாறு கூறவில்லை, பொய் சொல்கிறார் என விளக்கமளித்தார்.
ஆஸி பத்திரிக்கைகள் விமர்சனம்
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் முகமது சிராஜின் நடவடிக்கை பற்றி கடுமையாக விமர்சித்தனர். அவர் பந்துவீச்சு சரியில்லை என்பது உள்ளிட்ட மட்டமான விமர்சனங்களை சரமாரியாக எழுதிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இப்போது இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் காட்டமான பதிலடி கொடுத்திருக்கிறார். சிராஜ் செய்ததில் என்ன தப்பு? என கேள்வி எழுப்பியிருக்கும் அவர், ஆஸி பிளேயர்கள் எல்லாம் என்ன யோக்கியமானவர்களா? எனவும் வினவியுள்ளார்.
சுனில் கவாஸ்கர் விமர்சனம்
ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களின் இத்தகைய ரியாக்ஷன் எல்லாம் ஆஷஸ் டெஸ்ட் தொடரின்போது வெளிப்பட்டால் சிராஜ் கொடுத்த பதிலடியை விட இரண்டு மடங்கு இங்கிலாந்து அணியிடம் இருந்து வாங்கிக் கொள்வார்கள். அதனால் முகமது சிராஜ் செய்தது எல்லாம் ஒரு தவறே இல்லை என்றும் விளக்கமாக விமர்சனம் ஒன்றை எழுதியுள்ளார். கவாஸ்கர் சிராஜ்ஜூக்கு ஆதரவாக எழுதியிருக்கும் இந்த விமர்சனம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.