திமுக அரசுக்கு அதிமுகவை பார்த்து பயம் வந்துவிட்டது: பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் பேசியது என்ன?

சென்னை: தமிழகத்​தில் நடைபெற உள்ள 2026 சட்டப்​பேரவை தேர்​தலில் வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சி முடிவுக்கு வரும் என அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி தெரி​வித்​துள்ளார்.

அதிமுக செயற்​குழு மற்றும் பொதுக்​குழு கூட்டம் சென்னை வானகரத்​தில் கட்சி​யின் அவைத் தலைவர் தமிழ்​மகன் உசேன் தலைமை​யில் நேற்று நடைபெற்​றது. இதில் கட்சி​யின் கணக்கு வழக்​குகளை அமைப்பு செயலாளர் சி.விஜயபாஸ்கர் வாசித்தார். பின்னர் கட்சி​யின் பொதுச்​செய​லாளர் பழனிசாமி பேசி​ய​தாவது: கடந்த 2016 சட்டப்​பேரவை தேர்​தலில் கூட்டணி இன்றி, 234 தொகு​தி​களி​லும் இரட்டை இலை சின்னத்​தில் போட்​டி​யிட்டு பெற்றி பெற்ற கட்சி அதிமுக. அதன் பலத்தை கட்சி​யினர் தெரிந்​து​ கொள்ள வேண்​டும்.

சட்டப்​பேரவை கூட்​டத்தை ஆண்டுக்கு 100 நாட்கள் கூட்டு​வோம் என வாக்​குறுதி அளித்து​விட்டு, கடந்த 4 ஆண்டு​களில் வெறும் 113 நாட்கள் மட்டுமே கூட்​டி​யுள்​ளனர். மழைக்கால கூட்​டத்​தொடரை 2 நாட்கள் மட்டுமே நடத்​தினர். அதில் எதிர்க்​கட்சி தலைவரான எனக்கு 10 நிமிடம் மட்டுமே பேச வாய்ப்​பளித்​தனர். நான் சட்டப்​பேர​வை​யில் பேசும்​போதெல்​லாம் ஒளிபரப்பை துண்​டிக்​கின்​றனர். நான் சட்டப்​பேர​வை​யில் பேசுவதை ஒளிபரப்பி இருந்​தால், திமுக ஆட்சி இருந்​திருக்​காது. ஆளும் திமுக அரசுக்கு அதிமுகவை பார்த்து பயம் வந்து​விட்​டது.

தமிழகத்​தில் 2026 தேர்​தலுக்கு இன்னும் 14 மாதங்கள் உள்ளன. அதிமுக ஆட்சி அமைக்க இளைஞர் மற்றும் இளம்​பெண்கள் பாசறைக்கு 30 வயதுக்கு உட்பட்​டோரை அதிக அளவில் சேர்க்க வேண்​டும். திமுகவை மக்கள் புறக்​கணித்து​விட்​டார்​கள். மக்களை பார்க்க திமுக​வினர் அஞ்சுகின்​றனர். இதை நாம் சாதகமாக பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும்.

வரும் ஜனவரி மாத இறுதி​யில் 234 தொகு​தி​களி​லும் சூறாவளி சுற்றுப்​பயணம் மேற்​கொண்டு, இந்த ஆட்சி​யின் அவலங்களை மக்களிடம் தெரிவிக்க இருக்​கிறேன். 2026 தேர்​தலில் மக்கள் விரோத ஆட்சி அகற்​றப்​படும். வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு முடிவு​கட்​டப்​படும். அந்த தேர்​தலில் மக்கள் விரும்​பும் கூட்டணி அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்​டத்​தில் துணைப் பொதுச்​செய​லா​ளர்​கள் கே.பி.​முனுசாமி, நத்​தம் ​விஸ்​வநாதன், தலைமை நிலைய செய​லா​ளர் எஸ்​.பி.வேலுமணி, அமைப்பு செய​லா​ளர்​கள் டி.ஜெயக்​கு​மார், செம்மலை, பா.பென்​ஜமின் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்​.

16 தீர்​மானங்கள்: கூட்​டத்​தில் தீர்​மானங்களை ஜெயலிலதா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகு​மார், இலக்கிய அணி செயலாளர் வைகை செல்வன் வாசித்தனர். அதன் விவரம்: தமிழகத்​தில் ஃபெஞ்சல் புயலால் மிகப்​பெரிய பாதிப்பு ஏற்பட்​டுள்ள நிலை​யில், அதை எதிர்​கொள்ள முன்னெச்​சரிக்கை, பாது​காப்பு, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் எதையும் செய்யாத ஸ்டா​லின் தலைமையிலான திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்​கப்​படு​கிறது.

மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் கொண்டுவர மத்திய அரசு ஒப்பந்​தப்புள்ளி கோரிய​போதே, 10 மாதங்கள் அவகாசம் இருந்த நிலை​யில், அதை தடுக்க தவறிய திமுக அரசுக்​கும், நாடாளு​மன்​றத்​தில் சுரங்க சட்டம் கொண்டு​வரும்​போது போதிய அழுத்தம் கொடுத்து தடுக்க தவறிய திமுக தலைவர் ஸ்டா​லினுக்​கும் கண்டனம் தெரிவிக்​கப்​படு​கிறது. மதுரை, மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்​கும் திட்​டத்தை மத்திய அரசு கைவிட வேண்​டும்.

கல்வி, பொருளா​தா​ரம், வேலை​வாய்ப்பு ஆகிய​வற்றில் அனைவருக்​கும் சமஉரிமை வழங்​கும் வகையில் தமிழக அரசு சாதிவாரி கணக்​கெடுப்பை நடத்த வேண்​டும். கார் பந்தயம் நடத்​துதல், வரைமுறை​யின்றி சிலைகள் வைத்​தல், பூங்​காக்கள் அமைத்​தல், பேனா நினைவு சின்னம், பல கோடி ரூபா​யில் பன்னாட்டு கூட்ட அரங்கம் கட்டுதல் போன்ற​வற்றுக்கு முன்னுரிமை கொடுத்து ஆடம்பர செலவு செய்து, மக்கள் நலனை பின்னுக்கு தள்ளி அரசு நிதியை வீணடிக்​கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்​கப்​படு​கிறது.

மாநில உரிமையை பறிக்​கும் வகையில் மாநில பட்டியலில் இருந்த கல்வியை, நாட்​டில் அவசர நிலை அமலில் இருந்த காலத்​தில் பொதுப்​பட்​டியலுக்கு மாற்றியதை மீண்​டும் மாநில பட்டியலில் சேர்க்​கும் வகையில் அரசமைப்பு சட்டத்​தில் திருத்தம் கொண்டுவர வேண்​டும். தமிழகத்​துக்கான நிதிப் பகிர்வை பாரபட்​சமின்றி மத்திய அரசு வழங்க வேண்​டும்.

கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனிசாமியை 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் மீண்​டும் தமிழக ​முதல்​வ​ராக்கு​வோம் என்பன உள்​ளிட்ட 16 தீர்​மானங்​கள்​ நிறைவேற்​றப்​பட்​டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.