தற்கொலை செய்துகொண்ட பெங்களூரு ஐ.டி. ஊழியரின் மனைவி, மாமியார், மைத்துனர் கைதானது எப்படி?

பெங்களூரு: பெங்​களூருவை சேர்ந்த ஐ.டி. ஊழியர் அதுல் சுபாஷ் தற்கொலை வழக்​கில் அவரது மனைவி, மாமி​யார், மைத்​துனர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

பிஹாரின் சமஸ்​திபூர் மாவட்டம் பெனி பகுதியை சேர்ந்​தவர் அதுல் சுபாஷ் மோடி (35). இவருக்​கும் உத்தர பிரதேசத்​தின் ஜவுன்​பூர் பகுதியை சேர்ந்த நிகிதா சிங்​கானி​யா​வுக்​கும் (30) கடந்த 2019 ஜூனில் திரு​மணம் நடந்தது. கர்நாடக தலைநகர் பெங்​களூரு​வில் உள்ள தனியார் ஐ.டி. நிறு​வனத்​தில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) பொறி​யாளராக அதுல் பணியாற்றி வந்தார். திரு​மணத்​துக்கு பிறகு புதுமண தம்ப​தியர் பெங்​களூரு​வில் குடியேறினர். கடந்த 2020 பிப்​ரவரி 20-ம் தேதி அவர்​களுக்கு குழந்தை பிறந்​தது.

ஓராண்​டுக்கு பிறகு தம்ப​தியர் இடையே கருத்து வேறு​பாடு ஏற்பட்​டது. கணவரை பிரிந்த நிகிதா, உத்தர பிரதேசத்​தின் ஜவுன்​பூரில் உள்ள குடும்ப நல நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். கொலை முயற்சி, இயற்​கைக்கு மாறான உடல் உறவு, ஜீவனாம்​சம், விவாகரத்து என்பன உட்பட கணவருக்கு எதிராக 9 வழக்​குகளை நிகிதா தொடர்ந்​தார்.

ஜீவனாம்சம் வழக்​கில் ஜவுன்​பூர் குடும்ப நல நீதிபதி ரீட்டா கவுசிக் கடந்த ஜூலை 29-ம் தேதி தீர்ப்​பளித்​தார். குழந்​தை​யின் பராமரிப்பு செலவுக்காக மாதம்​தோறும் ரூ.40,000-ஐ நிகி​தாவுக்கு அதுல் வழங்க வேண்​டும் என்று தீர்ப்பு வழங்​கப்​பட்​டது.

இதன்​பிறகு, மன உளைச்​சலில் இருந்த அதுல், பெங்​களூரு​வில் உள்ள வீட்​டில் கடந்த 9-ம் தேதி தற்கொலை செய்து கொண்​டார். முன்ன​தாக, தற்கொலைக்கான காரணம் குறித்து 24 பக்க கடிதம் எழுதி வைத்​ததுடன், 90 நிமிட வீடியோவை​யும் வெளி​யிட்​டார்.

“என் மீதான வழக்​குகளை வாபஸ் பெற நிகிதா ரூ.3 கோடி கேட்​டார். எனது மகனை பார்க்க அனும​திக்க​வில்லை. மாமி​யார், மைத்​துனரும் என்னை பல்வேறு வகைகளில் மிரட்​டினர். வயதான எனது பெற்​றோரை​யும் மிரட்​டினர். வழக்கு விசா​ரணையை தள்ளிவைக்க ஜவுன்​பூர் நீதிபதி என்னிடம் ரூ.5 லட்சம் கேட்​டார்” என்று அந்த வீடியோ​வில் தெரி​வித்​திருந்​தார்.

இதைத் தொடர்ந்து, அதுல் தற்கொலை தொடர்பாக பெங்​களூரு போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர். இதை அறிந்து, நிகிதா குடும்பத்​தினர் தலைமறைவாகினர். இந்நிலை​யில், ஹரியானாவின் குருகிராமில் பதுங்கி இருந்த நிகிதா கடந்த 14-ம் தேதி கைது செய்​யப்​பட்​டார். நிகி​தா​வின் தாய் நிஷா, அண்ணன் அனுராக் ஆகிய இருவரும் உத்தர பிரதேசத்​தின் பிரயாக்​ராஜில் கைது செய்​யப்​பட்​டனர்.

3 பேரும் பெங்​களூரு அழைத்து வரப்​பட்டு நீதி​மன்​றத்​தில் நேற்று ஆஜர்​படுத்​தப்​பட்​டனர். 14 நாள் நீதி​மன்ற காவலில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.